Home / செய்திகள் / உலகம் / சறுக்கியபடியே ஓடுதளத்தை விட்டு வெளியேறிய விமானம் : 10 பயணிகள் காயம் !

சறுக்கியபடியே ஓடுதளத்தை விட்டு வெளியேறிய விமானம் : 10 பயணிகள் காயம் !

romeசக்கரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் ரோம் விமான நிலையத்தில் விமானம் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்பெயின் நாட்டில் இருந்து ரோம் நகருக்கு 151 பயணிகளுடன் ஏர்பஸ் ஏ-320 ரக விமானம் சென்றது.

இந்த விமானம் தரையிறங்க முயற்சித்த போது அதன் வலதுபுற சக்கரங்கள் இயங்கவில்லை. உடனே விமானி இதுபற்றி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

பிறகு அவர் விமானத்தை அவசரமாக தரையிறக்க, அது சறுக்கியபடியே ஓடுதளத்தை விட்டு வெளியேறி நின்றது.  விமானத்தில் இருந்த பயணிகளும், சிப்பந்திகளும் அவசரகால வழியாக வெளியேற்றப்பட்டனர்.

இருப்பினும் 10 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக இவர்களுக்கு விமான நிலையத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Scroll To Top