Home / சினிமா / திரை செய்தி / அமலாபாலுக்கு வந்த விருது ஆசை !

அமலாபாலுக்கு வந்த விருது ஆசை !

தமிழில் நடிப்பதற்கு முன்பே தாய்மொழியான மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்தார் அமலாபால். ஆனால் எந்த படத்திலும் அவர் தனக்குத்தானே டப்பிங் பேசியதில்லை.

அதேபோல்தான் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், தலைவா படத்தில்தான் முதன்முறையாக அமலாபாலை டப்பிங் பேச வைத்திருந்தார் டைரக்டர் விஜய்.

அதையடுத்து இப்போது அமலாபால் நடித்து வரும் மலையாளப்படங்களின் இயக்குனர்களும் அவரை டப்பிங் பேசச்சொல்லி வற்புறுத்துகிறார்களாம்.

Amala Paul

அதோடு, நடிப்புக்கு விருது கிடைக்கிற வாய்ப்புகளும் டப்பிங் பேசாததால் நழுவிப்போய் விடும் என்றும் சொல்ல, மலையாளத்தில் தான் நடிக்கிற படங்களுக்கு டப்பிங் பேசும் முடிவில் இருக்கிறாராம் அமலாபால்.

அது மட்டுமின்றி, தமிழில் நடிப்பது போல் இல்லாமல், மலையாளத்தில் முதிர்ச்சியான செண்டிமென்ட் கேரக்டர்களிலும் நடிப்பதற்கு ஒப்புதல் தெரிவித்து வருகிறார் அமலாபால்.

மேலும், எனக்கு பிறகு நடிக்க வந்தவர்களே மாநில விருது, தேசிய விருது என்றெல்லாம் வாங்கிக்கொண்டிருக்க நான் மட்டும் அந்த விருது ஏரியா பக்கமே செல்லாதது வருத்தமாக உள்ளது என்று சொல்லிக்கொண்டு, உணர்ச்சிப்பூர்வமான கதை மற்றும் கதாபாத்திரங்களாக தேடிக்கொண்டிருக்கிறாராம்.

Leave a Reply

Scroll To Top