Home / செய்திகள் / இலங்கை / ராஜபக்ஷ சகோதரர்களே இலங்கையில் அனைத்தும் செய்வதாக சர்வதேசம் தவறாக கருதுகிறது: ஜனாதிபதி !

ராஜபக்ஷ சகோதரர்களே இலங்கையில் அனைத்தும் செய்வதாக சர்வதேசம் தவறாக கருதுகிறது: ஜனாதிபதி !

தற்போதைய அரசாங்கத்தின் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வறிய மற்றும் குறைவருமானம் பெறுபவர்களுக்காக தெமட்டகொட பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

நாட்டின் அபிவிருத்திகளை ஏற்றுக் கொள்ள முடியாத சிலர் யுத்தக் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருவதாக அவர் தெரிவித்தார். குரோதமின்றிய சமாதானத்துடனான நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

mahinda_rajapaksa

சர்வதேச எந்த பிரச்சினையாக இருந்தாலும் தமது அரசாங்கத்தின் மீதே குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எந்தவிடயத்தின் பின்புலத்திலும் ராஜபக்ஷ சகோதரர்கள் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் சர்வதேச கொள்கையை தோற்றுவித்து தமது நிர்வாகத்தை அகற்றுவதற்கு முயற்சித்த போதும், அதற்கு இடமளிக்கப் படமாட்டாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் பிரிவினைவாதத்தை தோற்றுவிப்பதே அவசியமாக இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, சமயங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தி தமது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு முயற்சிப்பதாக குற்றம்சுமத்தினார்.
president_mahinda_rajapaksaஇந்தமுறை பொதுநலவாய மாநாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு அரச தலைவர்கள் இலங்கை தொடர்பில் பாராட்டினை தெரிவித்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

Leave a Reply

Scroll To Top