Home / இளமை / மீண்டும் சிம்பு–நயன்தாரா ஜோடி… ஹன்சிகா நிலை?

மீண்டும் சிம்பு–நயன்தாரா ஜோடி… ஹன்சிகா நிலை?

சிம்புவும், ஹன்சிகாவும் ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இருவருமே காதலை பகிரங்கமாக அறிவித்தனர். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
simbu hansika
இந்த நிலையில்தான் சிம்புவும் நயன்தாராவும் ஜோடியாக நடிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவை கதாநாயகனாக வைத்து பாண்டிராஜ் புதுபடம் இயக்குகிறார். இதை சிம்புவே தயாரிக்கிறார். இதற்கு கதாநாயகியை தேடிவந்தனர். தற்போது நயன்தாராவை தேர்வு செய்துள்ளார்கள். இதனை டைரக்டர் பாண்டிராஜும் உறுதிபடுத்தினார்.
nayantara-simbu-hotசிம்புவும் நயன்தாராவும் ஏற்கனவே காதலித்தனர். ‘வல்லவன்’ படத்தில் நடித்த போது காதல் மலர்ந்தது. ஒரு வருடத்தில் காதல் முறிந்து பிரிந்து விட்டார்கள். அப்போது ஒருவரையொருவர் தாக்கி பேட்டியும் அளித்தனர். அதன் பிறகு பிரபுதேவாவிடம் நயன்தாரா காதல் வயப்பட்டார். அதுவும் முறிந்து போனது.

Leave a Reply

Scroll To Top