Home / செய்திகள் / இலங்கை / கமரூனையும் மன்மோகன் சிங்கையும் சந்திக்க முடிவு-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

கமரூனையும் மன்மோகன் சிங்கையும் சந்திக்க முடிவு-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொனையும் சந்திக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வந்திருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்த போது, வடக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இலக்கம் 10, டௌணிங் வீதியில் உள்ள தனது இல்லத்துக்கு வருகை தருமாறு, வடக்கு மாகாண முதல்வருக்கு, டேவிட் கமரூன் அழைப்பு விடுத்துள்ளார்.

vikneswaran_001

அதேவேளை, பிரித்தானியப் பிரதமருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பான விபரங்களை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பரிமாறிக் கொள்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே சல்மான் குர்ஷித், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை புதுடெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த இரண்டு பயணங்களும் எப்போது என்று இன்னமும் இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.” என்று சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Scroll To Top