Home / பல்சுவை / அவலங்கள் / 3 மாத குழந்தையின் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய பெற்றோ

3 மாத குழந்தையின் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய பெற்றோ

baby torturedமூன்று மாத குழந்தையின் உடலில், கொதிக்கும் பாலை ஊற்றி துன்புறுத்திய பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.
கேரளா கட்டப்பனை அருகே 20 ஏக்கர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 28, நீது, 24. இந்த தம்பதியினருக்கு அனந்து,3, அஸ்வின்(மூன்று மாதம்) என 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 28ல் அஸ்வின் உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், கட்டப்பனை தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
குழந்தை துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என டாக்டர்களுக்கு சந்தேகம் எழுந்ததால், « சைல்ட் லைன்’ அமைப்பினருக்கு தகவல் கொடுத்தனர். குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் கோபாலகிருஷ்ணன் உத்தரவின்படி, கட்டப்பனை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
ராஜேஷ், நீது ஆகியோரிடம் போலீசார் விசாரித்ததில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், ஆத்திரமுற்ற நீது, குழந்தை மீது கொதிக்கும் பாலை ஊற்றியதால், காயங்கள் ஏற்பட்டது தெரிய வந்தது. எஸ்.ஐ.,சுனில்குமார் தமைலையிலான போலீசார், ராஜேஷ் மற்றும் நீதுவை கைது செய்தனர். கட்டப்பனையில் தனியார் மருத்துவமனையில் அஸ்வினுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
ராஜேஷ், நீது தம்பதியின் மூத்த மகன் அனந்துக்கும் சரியாக உணவு வழங்காமல் துன்புறுத்தியுள்ளனர். அனந்துவின் உடல் நிலையும் மோசமாக உள்ளதால், குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் மீட்டு,தொடுபுழாவில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

Leave a Reply

Scroll To Top