Home / செய்திகள் / உலகம் / விபத்தில் கணவர் குறித்தே இறந்தது தெரியாமல் டுவிட்டரில் செய்தி பதிவு செய்த அமெரிக்க மனைவி.

விபத்தில் கணவர் குறித்தே இறந்தது தெரியாமல் டுவிட்டரில் செய்தி பதிவு செய்த அமெரிக்க மனைவி.

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரின் அருகில் உள்ள  வான்கூவர் என்ற இடத்தை சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய கணவர் விபத்தில் இறந்ததை அறியாமல் அந்த விபத்து குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
crag
அமெரிக்காவை சேர்ந்த  Caran Johnson,  என்ற 41 வயது பெண்மணி டுவிட்டரில் மிகவும் பிரபலம் ஆனவர். இவருடைய டுவிட்டுகளுக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் இருந்து வருகின்றனர். இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தான் பார்த்த ஒரு விபத்து குறித்து சுவாரசிய டுவிட்டுகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த பகுதியில் சாலைகள் சரியில்லை என்றும், போக்குவரத்து விதிகளை சரியாக பராமரிப்பது இல்லை என்று சுமார் 10விதமான டுவிட்டுகளை அவர் பதிவு செய்தார். பின்னர் இரண்டு மணிநேரம் கழித்து போலீஸாரிடம் இருந்து தகவல் வந்த பின்புதான் அவருக்கு தெரிந்தது அந்த விபத்தில் இறந்தது அவருடைய அன்பு கணவர் என்று. இதனால் அதிர்ச்சி அடைந்த  Caran Johnson, பின்னர் அந்த தகவலையும் டுவிட்டரில் பதிவு செய்தார்.

Caran Johnson,  கணவர் Craig Johnson இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார் என்பது பரிதாபத்திற்குரியது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Leave a Reply

Scroll To Top