Home / செய்திகள் / உலகம் / வீடுகளுக்கான தபால் விநியோகத்தை நிறுத்த கனடா போஸ்ற் திட்டம் !

வீடுகளுக்கான தபால் விநியோகத்தை நிறுத்த கனடா போஸ்ற் திட்டம் !

கனடா தபால் நிறுவனம் வீடு வீடாக சென்று தபால் விநியோகம் செய்பவர்களுக்கு பிரியாவிடை கூறவுள்ளது. வளர்ந்து வரும் செலவினங்கள், தபால்களின் தொகை வீழ்ச்சி போன்ற காரணங்களால் அதன் பாரம்பரிய இயக்கத்தை தொடர முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.
postal worker
அடுத்த 5-வருட காலங்களில் வீடுகளுக்கான விநியோகம் நிறுத்தப்பட்டு அதற்குப்பதிலாக சமூக தபால் பெட்டிகளுக்கு நடந்து சென்று விநியோகம் செய்யப்பட திட்டமிடப்படவிருப்பதாக மத்திய அரச கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

6,000 முதல் 8,000 வரையிலான ஊழியர்கள் நீக்கப் படுவார்கள் என கனடா போஸ்ட் தெரிவித்துள்ளது. அடுத்த 5 வருடகாலப் பகுதியில் 15,000 ஊழியர்கள் வரை இளைப்பாறுதல் அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறலாம் என தபால் சேவை எதிர்பார்க்கின்றது.

கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி கனடியமக்களுக்கு வீட்டு விநியோகம் கிடைக்கும் எனவும் கூறப்படுகின்றது.

கனடா போஸ்ட் நிதிநெருக்கடி நிலைமையை எதிர்நோக்கி உள்ளதாகவும் கூறப்படுகின்றது. தபால் சேவை, தனியார் விரைவு அஞ்சல் பணி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பெரும்பாலானோர் தொடர்புகொள்ளுதல், கட்டணங்கள் செலுத்துதல் போன்ற செயற்பாடுகளை இணையத்தளம் ஊடாக செய்ய ஆரம்பித்துள்ளதால் தபால் சேவை கடுமையான போட்டியை எதிர்நோக்கி உள்ளது.

மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி அறிவிக்கப் பட்டபோதும் செப்ரம்பர் 28 முடிவில் 109 மில்லியன் டொலர்கள் வரிக்கு முன்னய இழப்பு ஏற்பட்டுள்ளதென அறிவிக்கப் பட்டுள்ளது. வரிக்கு முன்னய இழப்பு ஒப்பிடப்படக்கூடிய ஒருவருடத்திற்கு முன் 145 மில்லியன் டொலர்களாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

One comment

Leave a Reply

Scroll To Top