Home / செய்திகள் / இலங்கை / இறந்த புலிகளின் விபரங்களை சொல்ல மக்கள் அச்சம் !

இறந்த புலிகளின் விபரங்களை சொல்ல மக்கள் அச்சம் !

oppressed tamilகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் யுத்தகால சேத விபரங்களை மதிப்பிடும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இலங்கை அரசின் புள்ளிவிபரத் திணைக்களம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன்பொழுது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கொல்லப்பட்ட தமது பிள்ளைகள் மற்றும் உறவுகள் தொடர்பான விபரங்களை பதிவு செய்ய மக்கள் அச்சமடைந்துள்ளதாக செய்தியாளர் தெரிவிக்கிறார்.

1983ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட யுத்த சேதங்களில் கொல்லப்பட்ட எல்லோரது விபரங்களும் உள்ளடக்கபடவேண்டும் என்பதே குறித்த மதிப்பீட்டின் திட்டம். யுத்த்தில் கொல்லப்பட்ட புலிகளின் விபரங்களை பதிவு செய்வதா என்பது பற்றி அதிகாரிகள் குறிப்பிடவில்லை.

யுத்த உயிர் சேதமாகவும் இழப்பாகவும் புலிகள் இயக்கத்தில் இருந்து இறந்தவர்களை மக்கள் கருதுகின்றபோதும் விபரங்களை பதிவு செய்ய மக்கள் மத்தியில் அச்சம் காணப்படுகிறது.

இதனால் பலர் குறித்த விபரங்களை பதிவு செய்யாமல் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. அதனால் தமக்கு பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்றே அவ்வாறு இழப்பு விபரங்களை பதிவுசெய்யவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Scroll To Top