Home / செய்திகள் / உலகம் / பர்தா பெண்களுக்கு பிரான்ஸ் காவல்துறை எச்சரிக்கை!

பர்தா பெண்களுக்கு பிரான்ஸ் காவல்துறை எச்சரிக்கை!

purdahபர்தா அணிந்து செல்லும் இஸ்லாமியப் பெண்களுக்கு எதிராக பிரான்ஸ் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

பாதுகாப்பு, விபத்துத் தவிர்ப்பு உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் பிரான்சில் இஸ்லாமியப் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிந்து செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்தத் தடை சரிவர அமுல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், குறித்தத் தடையை பிரான்ஸ் காவல்துறையினர் தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வீதிகளில் பர்தா அணிந்து செல்லும் பெண்கள் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்படுகின்றனர்.

பிரான்ஸ் காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு இஸ்லாமிய அமைப்புகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Scroll To Top