Home / சினிமா / திரை செய்தி / ஜிவி பிரகாஷ் குமாரின் தயாரிப்பில் உருவான முதல் படம் ‘மதயானைக்கூட்டம்’.

ஜிவி பிரகாஷ் குமாரின் தயாரிப்பில் உருவான முதல் படம் ‘மதயானைக்கூட்டம்’.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் தயாரிப்பில் உருவான முதல் படம் ‘மதயானைக்கூட்டம்’. புதுமுக நாயகன் கதிர் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக ஒவியா கதாநாயகியாக நடித்துள்ள படம் இது. மதுரையை கதையின் களமாகக் கொண்டுள்ள இந்தத் திரைப்படத்தை, விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். ரகுனந்தன் இசையில் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

madhayanai-koottam-movie-stills-2

மதயானைக்கூட்டம் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இத்திரைப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஜே.எஸ்.கே ஃபில்ம் கார்பரேஷன் இந்த படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளது. டிசம்பர் 25ஆம் தேதி மதயானைக்கூட்டம் வெளியாகிறது.

Leave a Reply

Scroll To Top