Home / செய்திகள் / இந்தியா / மனைவி உடலை துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன் – பமும்பையில் பயங்கரம்

மனைவி உடலை துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன் – பமும்பையில் பயங்கரம்

குடும்பத் தகராறில் மனைவியை 3 துண்டுகளாக வெட்டி  பிரிட்ஜில் மறைத்து வைத்த கணவனை போலீசார் கைது செய்தனர். மும்பை அருகே தானே மாவட்டம் மீரா ரோட்டில் கோல்டன் நெஸ்ட் காம்ப்ளக்சில் உள்ள நக்ஷத்திரா டவர் கட்டிடத்தின் 14 வது மாடியில் வசிப்பவர் கிரீஷ் கோட்டே (37) ஆட்டோ டிரைவர¢. அவரது மனைவி  மதுவந்தி (35) கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த கோட்டே கத்தியால் தனது மனைவியை குத்திக் கொன்றார்.

mumbai murder

பின்னர் உடலை 3 துண்டுகளாக வெட்டினார். அதில் இரு துண்டுகளை வீட்டின் பிரிட்ஜில் வைத்து பூட்டினார். இன்னொரு துண்டை படுக்கைக்கு அடியில் மறைத்துவைத்தார். பின்னர் நடந்த சம்பவத்தை பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது சகோதரரிடம் தெரிவித்தார்.

அவர் உடனே போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று கோட்டேவை கைது செய்தனர். விசாரணையின் போது அவர் சடலத்தை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டினார். போலீசார் சடலத்தை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Scroll To Top