Home / சினிமா / திரை செய்தி / துபாய் நாட்டின் ராயல் படகில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் காட்சி படமாக்கப்படுகின்றது !

துபாய் நாட்டின் ராயல் படகில் ஸ்ருதிஹாசன் நடிக்கும் காட்சி படமாக்கப்படுகின்றது !

பாலிவுட் தயாரிப்பாளரான ஃபிரோஸ் நாதியாவாலா தயாரிக்கும் ‘வெல்கம் பேக்’ ஒரு காமெடி திரைப்படமாக உருவாகி வருகின்றது. இதில் ஜான் ஆப்ரகாம், ஸ்ருதிஹாசன், நானா படேகர், அனில் கபூர் மற்றும் பரேஷ் ரவல் போன்றோர் நடிக்கின்றனர்.
Shruti Hassan
இந்தப் படத்தில் படகுக்காட்சி ஒன்று இடம் பெறுகின்றது. இதற்காக துபாய் நாட்டின் ராயல் படகு ஒன்று இதில் உபயோகப் படுத்தப்பட்டிருக்கின்றது.

துபாய் அரச குடும்பத்தின் படகில் படப்பிடிப்பு நடப்பது இதுவே முதன்முறையாகும். மிகவும் ஆடம்பரமான இந்தப் படகில் திறந்தவெளி நீச்சல்குளம் ஒன்று உள்ளது. இரண்டு ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கான வசதிகள் இந்தப் படகில் உள்ளது. மொத்தம் 50 ஊழியர்கள் இந்தப் படகில் பணியாற்றுகின்றனர்.

அரச குடும்பத்தினரை நீண்டகாலமாக எனக்குத் தெரியும், அதனால் அவர்களிடம் அனுமதி பெற்று இந்தப் படகில் படப்பிடிப்பு நடத்துகின்றோம்.

நானும், இயக்குநர் பஸ்மீயும் படகிற்கு சென்று படப்பிடிப்பிற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தோம். ஏரியல் காமிரா கொண்டு படப்பிடிப்பு நடத்த உள்ளோம் என்று நாதியாவாலா தெரிவித்தார்.

Leave a Reply

Scroll To Top