Home / செய்திகள் / இலங்கை / ஐ.நா விசேட பிரதிநிதி யாழிற்கு விஜயம்: முதலமைச்சர் மற்றும் ஆளுனரை சந்தித்து பேச்சு

ஐ.நா விசேட பிரதிநிதி யாழிற்கு விஜயம்: முதலமைச்சர் மற்றும் ஆளுனரை சந்தித்து பேச்சு

un ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் விசேட பிரதிநிதி சலோகா பெயானி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐ.நா விசேட பிரதிநிதி, அவ்விஜயத்தின் ஒரு பகுதியாகவே இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இடம்பெயர்ந்த மக்களையும் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களையும் அவர் நேரடியாக சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், தனது இந்த விஜயம் குறித்த முழுமையான அறிக்கை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Scroll To Top