Home / செய்திகள் / இலங்கை / ஆனையிறவில் அடுத்த போர் நினைவுச் சின்னம், ஆனால் தமிழர்கள் மாவீரர்களை வணங்கத் தடை !

ஆனையிறவில் அடுத்த போர் நினைவுச் சின்னம், ஆனால் தமிழர்கள் மாவீரர்களை வணங்கத் தடை !

elephant passஆனையிறவில் இலங்கை இராணுவத்தால் மற்றுமோர் போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனையிறவில் ஏற்கனவே ஒரு போர் வெற்றிச் சின்னத்தை அமைத்துள்ளனர்.

இந்தநிலையில்  1991ம் ஆண்டு விடுதலைப் புலிகள் ஆனையிறவுப் பெருந்தளம் மீது, “ஆகாயக் கடல் வெளி தாக்குதல்” என்ற பெயரில் முற்றுகைத் தாக்குதல் நடத்திய போது, புலிகளின் உள்ளூர் தாயாரிப்பு புல்டோசர் கவசஊர்தி மூலம், முன்னரங்க நிலைகளை அழிக்க மேற்கொண்ட முயற்சி, கோப்ரல் காமினி குலரத்னவால் முறியடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த கோப்ரல் காமினி குலரத்ன என்ற சிறிலங்காப் படைச் சிப்பாயின் நினைவாக்கவே அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த கோப்ரல் காமினிக்கு சிறிலங்காவின் அதி உயர் விருதான பரம வீர விபூஷண விருது வழங்கப்பட்டது.

ஆனையிறவுப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் கைப்பற்றிய பின்னரும், குறிப்பிட்ட புல்டோசர் கவசஊர்தி அந்த இடத்தில் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டிருந்தது.

சிறிலங்காப் படையினர் வசம் ஆனையிறவு வீழ்ச்சி கண்ட பின்னர், குறிப்பிட்ட இடமும் ஒரு போர்ச்சுற்றுலா மையமாக மாற்றமடைந்தது.

அமைக்கப்பட்டு வரும் உருவச் சிலையை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அல்லது பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச திறந்து வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கோப்ரல் காமினியின் சொந்த இடமான ஹசலக்கவில், அமைக்கப்பட்ட அவரது உருவச்சிலையை கடந்த ஓகஸ்ட் மாதம் மஹிந்த ராஜபக்ச திறந்து வைத்திருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி சிங்கள நினைவுச் சின்னங்கள் தமிழர் பகுதியில் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றது. ஆனால் உயிரிழந்த தமிழ் மாவீரர் களை வணங்க கூட அனுமதி கொடுக்காதது தமிழர்களுக்கு எரிச்சலையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Scroll To Top