Home / செய்திகள் / இலங்கை / புதுக்குடியிருப்பில் இன்று முன்னாள் போராளி ஒருவர் கடத்தல்!

புதுக்குடியிருப்பில் இன்று முன்னாள் போராளி ஒருவர் கடத்தல்!

white van abducts_CIபுதுக்குடியிருப்பில் முன்னாள் போராளி ஒருவர்  இன்று மதியம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடத்தப்பட்டுள்ளார், இவர் உடையார் கட்டு தெற்கு பகுதிய சேர்ந்த மயில்வாகனம் யசிகரன் என்ற முப்பத்தி நான்கு வயது இளைஞரே கடத்தப்பட்டுள்ளார்.

இவர் புதுக்குடியிருப்பில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார், இன்று மதியம் திடிரென அப்பகுதியில் வந்த வெள்ளை வானில் வந்தோரால் இவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வெள்ளைவேனில் வந்தவர்கள் சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்கள் என்பதும் சந்தேகத்திற்கு இடமில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட மயில்வாகனம் யசிகரன் தனது தாயுடன் மட்டுமே வாழ்ந்து வருகிறார் எனவும் அறியப்படுகிறது. இந்த கைதின் காரணமாக இப்பிரதேசம் எங்கும் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

Leave a Reply

Scroll To Top