Home / செய்திகள் / இலங்கை / மீண்டும் புலி வந்துவிட்டது என்கிறார்– படை பேச்சாளர் .

மீண்டும் புலி வந்துவிட்டது என்கிறார்– படை பேச்சாளர் .

Ruwan-Wanigasuriya-

வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் நிலைமையொன்று தோன்றியுள்ளது. அதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது. எனவே தேசிய பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு காவல்துறையுடன் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருவதாக படை பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

வடக்கில் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இதனால் வடமாகாண மக்கள் மிகுந்த அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். இது தொடர்பாக, படை பேச்சாளர் பிரகேடியர் ருவன் வணிகசூரியவிடம்இகேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவதுஇ
நாட்டின் தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. எனவே அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அதே போல் பொது மக்களும் அதற்கான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பது எமது நோக்கமல்ல. கடந்த 3 தசாப்த காலங்களாக நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதம் ஆயிரக்கணக்கான உயிர் தியாகங்கள் செய்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.ஆனால் மீண்டும் வடக்கில் பயங்கரவாதம் தலைதூக்கும் நிலையொன்று தோன்றியுள்ளது. எனவே தான் அங்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 13 ஆம் திகதி கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டார்கள். அப்போது புலிச்சந்தேக நபரொருவர் காவல்துறை மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனால் காவல்துறையினர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து வடக்கில் விசேட சுற்றி வளைப்பு தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. பயங்கரவாத செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்போர் யார் என்பதை கண்டுபிடித்து அதனை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு பிரிவுக்குள்ளது. எனவே தான் காவல்துறையுடன் இணைந்து நாம் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

போர்முடிவுக்கு வந்து 5 வருடங்களும் சிங்களஅரசு விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டோம் என்ற மார்தட்டி உலகெங்கும் பரப்புரை செய்தது. இப்போது ஜெனிவா பேச்சுக்களில் தமிழர் பிரதேச படைகுறைப்புபற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு திக்குமுக்காடி இப்போ புலிகள் வந்துவிட்டார்கள் எமக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு தேவை எனவே படைகுறைப்பு இல்லை என்று இப்படியான கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு தமிழர் தாயகத்தில் படைகுறைப்புக்கு இடமில்லை என்று சொல்லாமல் சொல்லுகிறது சிங்கள அரசும் அதன் படைகளும்.

Leave a Reply

Scroll To Top