Home / செய்திகள் / இந்தியா / பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை வழக்கு இன்று விசாரணை

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை வழக்கு இன்று விசாரணை

perarivalan-santhan-murugan-nalini-_CIராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேர் விடுவிக்கப்படும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவி, ராபர்ட்,ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது. இந்தமுடிவிற்கு இடைக்காலத் தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது.

இதற்கு தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ரமணா ஆகியோர் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை கேட்ட பிறகும் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதனையடுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதிகள் எந்த தரப்பினரும் மீண்டும் வழக்கை ஒத்திவைக்க கோரக் கூடாது என்று கண்டிப்புடன் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த 24ம் திகதி பதில் மனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Scroll To Top