Home / செய்திகள் / இலங்கை / முன்னாள் போராளிகளை குறிவைக்கும் படைகள் .

முன்னாள் போராளிகளை குறிவைக்கும் படைகள் .

A Sri Lankan soldier (L) stands guard asவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளைச் சந்திப்புகளுக்கு அழைக்கும் , சிறீலங்கா படைகள் தேடப்படும் சந்தேக நபர்களுடன் தொடர்பு வைக்கவேண்டாம் என்று குறிப்பிட்டு மிரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறீலங்கா பயங்கரவாத தடுப்புப் பிரிவைச்சேர்ந்தவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் இருவர் தேடப்படுவதாக அறிவித்தல்களும் துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டு வரும் இந்த வேளையில் சிங்கள படைகள் இந்த கடும் அறிவிப்பை முன்னாள் போராளிகளை அழைத்து எச்சரிக்கைவிடுத்து வருகிறது. . அத்துடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவனரால் தமிழர்தாயகத்தில் பல இடங்களில் பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு பிரதேச ரீதியாகவும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுடன் சந்திப்புகளை நடத்திவருகின்றது படைதரப்பு.. துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் படைகளால் இவ்வாறான சந்திப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன.
அதன்போது தேடப்படுபவர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இருவருடனும் எந்தக் காரணத்தைக் கொண்டும் தொடர்பை பேணக் கூடாது என்றும், அவர்கள் பற்றிய தகவல் கிடைத்தால் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கைவிடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பணத்துக்காக பயங்கரவாத வேலைகளில் ஈடுபடுமாறு யாராவது பணித்தால் அவர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், கடந்த காலங்களில் நடந்ததே உங்களுக்கு மீண்டும் நடக்கும் என்றும் படைகள் கடுமையாக மிரட்டியதோடு எச்சரித்துள்ளனர் என்றும் குறித்த சந்திப்புகளில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Scroll To Top